சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க.வே பாதுகாப்பு அரண் - மு.க.ஸ்டாலின்

0 922
சிறுபான்மை மக்களுக்கு என்றும் திமுக தான் துணையிருக்கும் என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு என்றும் திமுக தான் துணையிருக்கும் என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரத்தநாட்டில் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மட்டுமல்ல, தானே முதலமைச்சர் வேட்பாளராக வந்திருப்பதாக அவர் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். 

அதனைத் தொடர்ந்து, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவினாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றவே விவசாய கடன் தள்ளுபடி என்று அதிமுக அரசு அறிவித்திருப்பதாக சாடினார். அதிமுக ஆட்சியில் விலைவாசி பலமடங்கு உயர்ந்துள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

பின்னர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, சூலூர், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளுக்கான திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கோவை ஈச்சனாரி அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் சிறுபான்மை மக்களுக்கு என்றும் திமுக தான் துணையிருக்கும் என்றார்.

கொரோனா பாதிப்பு நிவாரணமாக திமுக அறிவித்த 4 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சி அமைந்த உடன் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளியே வரும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் மண்டலத்துடன் இணைக்க நடவடிக்கை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments