தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியது

0 3955
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியது

3 மாதங்களுக்குப்பின், தமிழ்நாட்டில்  கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 87 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 610 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 9 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பெருநகரில் புதிதாக 421 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 105 , கோயம்புத்தூரில் 102 , திருவள்ளூரில் 78 மற்றும் தஞ்சாவூரில் 64 பேரும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில்  கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments