வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் கொண்டு செல்லப்படுகிறதா ? தமிழக ரயில்களில் சோதனை தீவிரம்

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய தமிழக ரயில்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய தமிழக ரயில்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு போலீசாருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய ரெயில்கள் மூலம் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதனால் ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை ரெயில்வே காவல் மாவட்டத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments