தமிழகத்தில் 45,000 வாக்குச் சாவடிகளில் வெப் கேமிரா பொருத்த நடவடிக்கை

0 982
தமிழகத்தில் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமிரா’ மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமிரா’ மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுப்பி உள்ள கடித த்தில், தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள 88,939 வாக்குச்சாவடிகளில் சுமார் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வருகிற 22, 23-ந் தேதிகளில் வாக்குச் சாவடிகளில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வருகிற 27-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தும் பணி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments