கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரம்

0 1358
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரம்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுடன் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொகுதிக்கு உட்பட்ட அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதியில்  வீதி வீதியாக சென்று அடிப்படை கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

இதனையடுத்து மக்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவர் தான் வெற்றி பெற்றால்  அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments