இந்திய ராணுவத்திற்கு புதிய ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து

0 1597
இந்திய ராணுவத்திற்கு புதிய ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்திய ராணுவத்திற்கு புதிய ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

பொதுத் துறை நிறுவனமான பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்துடன் இந்திய ராணுவம் செய்துள்ள இந்த ஒப்பந்தத்தின் படி, 1188 கோடி ரூபாய் செலவில், 4960 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன.

பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் பெற்றுள்ள அனுமதியின் படி மிலன்-2 டி ரக ஏவுகணைகளை ராணுவத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பாரத் டைனமிக் நிறுவனம் தயாரித்து கொடுக்கும்.

வீரர்கள் தோளில் தாங்கியும், வாகனங்களில் பொறுத்தியும் இந்த ஏவுகணைகளை ஏவ முடியும். 1850 மீட்டர் தூரத்தில் உள்ள நகரும், நகராத இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை இந்த ஏவுகணைகளுக்கு உண்டு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments