5 டீக்கு 2 ஆயிரம் ரூபாயா ? அள்ளிக் கொடுத்த பொன்முடி..!

0 5836

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்துக்கிடையே டீக்குடித்த திமுக வேட்பாளர் பொன்முடி டீக்கடைகாரருக்கு 2 ஆயிரம் ரூபாயை அள்ளிக்கொடுத்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி சந்தைப்பேட்டையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சந்தப்பேட்டை பகுதியில் உள்ள திருநங்கைகள் இல்லத்திற்குச் சென்று அவர்களிடம் வாக்கு சேகரித்த பொன்முடி , அடுத்து திமுக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் உங்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

பிரச்சாரத்துக்கு நடுவே அங்குள்ள டீக்கடைக்கு சென்று தேனீர் அருந்தினார். அவருடன் சேர்ந்து மொத்தம் 5 பேர் தேனீர் அருந்திய நிலையில், டீ குடித்து முடிந்ததும் சட்டைப்பையில் இருந்து 500 ரூபாய் நோட்டுக்களை சிறு கத்தையாக எடுத்து சுருட்டி மடக்கி அந்த கடைக்காரரிடம் அள்ளிக்கொடுத்தார் பொன்முடி..!

அதில் 500 ரூபாய் நோட்டுக்கள் 4 என மொத்தம் 2000 ரூபாய் இருந்ததாக கூறப்படுகின்றது. டீக்கடைக்காரர் பொன்முடியை வாழ்த்திய நிலையில் உடன் சென்றோர் 5 டீ, 2 ஆயிரம் ரூபாயா ? என்று முனங்கியபடியே சென்றனர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments