இயக்குனர் ஹரியை மிரட்டும் கொரோனா..! படப்பிடிப்பு பாதியில் ரத்து

0 6366

பழனியில் நடிகர் அருண் விஜய்யை வைத்து படம் இயக்கிக் கொண்டிருந்த இயக்குனர் ஹரி கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பணியாற்றியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் படப்பிடிப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது.

சாமி சிங்கம் போன்ற சூப்பர் ஹிர் படங்களின் இயக்குனரான ஹரி தற்போது தனது உறவினரான அருண்விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் நடந்து வந்தது. நாயகன் அருண்விஜய், நாயகி பிரியாபவாணி சங்கர், நகைச்சுவை நடிகர் யோகிபாபு உள்பட ஏராளமானோர் அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இயக்குனர் ஹரியுடன் பணிபுரிந்த ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் இயக்குனர் ஹரியும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஹரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை அறிய ரத்தம் மற்றும் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

வெளியூரில் இருந்து படப்பிடிப்புக்கு வந்த சினிமா குழுவினருக்கு கொரோனா என்ற தகவல் ஊர் முழுவதும் பரவ தொடங்கியதும் பரப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கோ, நடிகர்கள் சென்று வந்த உடற்பயிற்சி கூடத்திற்கோ கிருமி நாசினி தெளிக்கும் முன் எச்சரிக்கை பணிகள் எதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments