வரதட்சணைக் கேட்டு துன்புறுத்திய மாமியார்... குழந்தையைக் கொன்று, உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்

0 2598
கைது செய்யப்பட்ட மாமியார் தனலட்சுமி மற்றும் கணவர் பார்த்திபன்!

மயிலாடுதுறையில் மாமியார் 30 பவுன் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் ஒன்றேகால் வயது மகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாவடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை மேலக்கடை முடுக்குத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பார்த்திபன். ரயில்வே ஊழியரான இவர் தஞ்சை மாவட்டம் நரசிங்கன்பேட்டையை சேர்ந்த செல்லதுரை மகள் செல்வகுமாரி(24) என்பவரை காதலித்தார். அதனைத்தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது லிவிஷா என்ற ஒன்றேகால் வயது பெண் குழந்தை உள்ளது.

அவசரமாக திருமணம் நடைபெற்றதால் செல்வகுமாரிக்கு 3 பவுன் நகை மட்டுமே அவரது பெற்றோர் போட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக பார்த்திபனின் தாயார் தனலட்சுமி தனது மாமியார் அதிகாரத்தைக் காட்ட தொடங்கினார். மருமகள் செல்வகுமாரியிடம் 30 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் செல்வகுமாரியின் தந்தை செல்லதுரைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கேட்ட வரதட்சனையை உடனடியாக கொடுக்க முடியாத சுழலும் ஏற்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை மாலை தனது பெற்றோரிடம் பேசிய செல்வகுமாரி மாமியார் வரதட்சனைக் கேட்டு துன்புறுத்துவதாகவும், அதனால் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்படுதாகவும் கூறியுள்ளார்.

வியாழன்று காலையில் எழுந்து வழக்கம்போல் வீட்டுவேலை செய்து வந்த செல்வகுமாரி, அன்று மதியம் வீட்டின் அறையில் உள்ள ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் அருகில் உள்ள கட்டிலில் அவரின் ஒன்றேகால் வயது பெண் குழந்தை லிவிஷாவும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து குத்தாலம் போலீசார் செல்வகுமாரியின் கணவன் பார்த்திபன் மற்றும் அவரின் தாய் தனலட்சுமியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் மகளை கொன்றுவிட்டு செல்வகுமாரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த குத்தாலம் போலீசார் கணவன் பார்த்திபன் மற்றும் அவரின் தாயார் தனலட்சுமியை கைது செய்து சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments