மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

0 4661
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

ராணுவத்தில் உள்ள கேன்டீன் போல், நியாயமான விலையில் பொருட்களை விற்பதற்கு மக்கள் கேன்டீன் உருவாக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தனி நபர் ஆண்டு வருமானத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த நடவடிக்கை, அரசின் கடனை அடைப்பது, இல்லத்தரசிகள் திறன் மேம்பாட்டை அதிகரித்து அவர்களே மாதந்தோறும் வருவாய் ஈட்ட வழிவகை செய்வது, நீட்டுக்கு பதிலாக மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் சீட் தேர்வு, 234 தொகுதிகளிலும் தற்சார்பு கிராமங்கள் உருவாக்குதல், அமைப்பு சரா தொழிலாளர்களை ஒரு அமைப்பாக கொண்டு வருதல்,  அரசுப் பள்ளிகள் சர்வதேச தரத்தில் உயர்த்தப்படும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என 41 தலைப்புகளின் கீழ் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments