சிக்ஸ்டீஸ் சிம்ரன்ஸ் என்னம்மா இதெல்லாம் ? காலம் போன காலத்தில்…!

0 3518
சிக்ஸ்டீஸ் சிம்ரன்ஸ் என்னம்மா இதெல்லாம் ? காலம் போன காலத்தில்…!

நெய்வேலியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட 60 வயதை தாண்டிய பெண் தொண்டர்கள் போட்ட குத்தாட்டத்தால் அந்த இடமே அதகளமானது.

நெய்வேலி பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வேட்பாளருக்காக காத்திருந்த இடைவெளையில் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக செண்டை மேளம் அடிக்கப்பட்டது, சத்தத்தை கேட்டதும், தங்கள் நடனத்திறமையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த சிக்ஸ்டீஸ் சிம்ரன்ஸ் சிலர் களத்தில் இறங்கி தாளத்தையே மிஞ்சும் வகையில் குத்தட்டம் போட்டனர்..!

செண்டை மேளத்துக்கு டப்ஃ கொடுக்கும் விதமாக உடனடியாக அங்கு வந்த பறைஇசைகலைஞர்கள் தங்கள் அடிமுறையை காட்ட, நாட்டிய பேரொளிகளால் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் தறிகெட்டு ஆடத்தொடங்கினர். அவர்கள் போட்ட ஆட்டத்தை கண்டு பிரசாரத்துக்கு வந்திருந்த எயிட்டீஸ் ஏஞ்சல்ஸ் வாய்பிளந்து ரசிக்க தொடங்கினர்

பாஞ்சாலிகள் போல 5 பேர் ஆடிக் கொண்டிருக்க அதிமுக கொடியை கையில் ஏந்தியபடி கூட்டத்துக்குள் புகுந்த 6 வதாக ஒரு சிம்ரன் குதித்து போட்ட குத்தாட்டத்தால் அந்த இடமே குலுங்கியது. கொளுத்தும் வெயிலில் வாக்கு வேட்டைக்கு இடையே இது போன்ற நடன சேட்டைகள் தான் அரசியல் கட்சியினரை உற்சாகப்படுத்துகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments