வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

0 1152
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், இலங்கைக்கு தென் கிழக்கே வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுகு வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்படும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை இடிமின்னலுடன் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments