சொடக்கு மேல சொடக்கு போடுது மன்சூர் அலப்பறை..! அங்கே என்ன தெரிகிறது..?

0 11836
சொடக்கு மேல சொடக்கு போடுது மன்சூர் அலப்பறை..! அங்கே என்ன தெரிகிறது..?

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் கட் பனியனுடன் பூங்காவுக்கு சென்று சிறுபிள்ளைகள் போல எறுக்கஞ்செடியில் சொடக்கு விட்டு விளையாடினார். கமலுக்கு பாஸ் மார்க் போட்ட தொண்டாமுத்தூர் பிக்பாஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கோவையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர்அலிகான் காந்திபார்க் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவாறே பிரச்சாரம் மேற்கொண்டார்.

காந்தி பார்க்கில் இளைஞர்களுடன் பூப்பந்து விளையாடியும், உடற்பயிற்சி மேற்கொண்டும் , பொது மக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டும் மன்சூர் அலிகான் பிரச்சாரம் களைகட்டியது..!

பின்னர் பூங்காவை சுற்றி அங்கும் இங்குமாக நடந்து கொண்டு அனைவரையும் கவரும் விதமாக நடந்து கொண்ட மன்சூர் அலிகான் திடீரென்று பூங்காவில் இருந்த நாகலிங்க பூ மரத்தின் அருகே நின்று குறு குறுவென உற்று நோக்கினார்

பின்னர் அவருக்கே உரித்தான பாணியில் நக்கல் நையாண்டி செய்து கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்ட மன்சூர் அலிகான் பூங்காவில் இருந்த எருக்கம்பூ செடியை பிடித்து பாஸா?? பெயிலா?? என்று சிறுபிள்ளை போல சொடக்கு விட்டு விளையாடினார்.

அப்போது கமலஹாசன் பாஸ், பிக் பாஸ், எல்லாரும் பாஸ், என்று நக்கலடித்துக் கொண்டே எறுக்கம் பூவை சொடக்கு விட்டார் மன்சூர் அலிகான்

அதன் பின் பூங்காவின் வெளியே அமைந்த மூலிகை சூப் கடையில் இருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொண்டாமுத்தூர் தொகுதி வாசிகளுக்கு நடிகர் மன்சூர் அலிகானால் இன்னும் 2 வாரத்துக்கு பிக் எண்டெர்டெயின்மெண்ட் கன்பார்ம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments