ஊர்ந்து சென்றல்ல, நடந்து சென்றுதான் முதலமைச்சர் பதவி ஏற்றேன்: எடப்பாடி பழனிசாமி பதிலடி

0 3254
ஊர்ந்து சென்றல்ல, நடந்து சென்றுதான் முதலமைச்சர் பதவி ஏற்றேன்: எடப்பாடி பழனிசாமி பதிலடி

ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவி வாங்க தான் என்ன பாம்பா? பல்லியா? என என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஊர்ந்து சென்றல்ல, நடந்து சென்றுதான் முதலமைச்சர் பதவியை  ஏற்றதாக மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சியில் இழந்த காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்தது அதிமுக அரசு என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தான் விவசாயி என்று கூறினால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது என்று கேள்வி எழுப்பினார். தான் இப்போதும் ஒரு விவசாயி என்றும், இப்போதும் விவசாயம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவி பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் விமர்சிப்பதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, ஒரு முதலமைச்சரை எப்படி பேசவேண்டும் என்பது கூடத் தெரியாதவர்தான் ஸ்டாலின் என சாடினார்.

அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதால் தொழில் வளம் பெருகுவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், விவசாய மோட்டார்களுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கி இந்திய திருநாட்டிற்கே தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய அரசு அதிமுக அரசு எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, மாதந்தோறும் 6 சிலிண்டர்கள் இலவசம், ரேசன் அட்டைகளுக்கு 1500 ரூபாய் நிதியுதவி, இலவச வாஷிங்மெஷின் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் எடுத்துரைத்தார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். நாட்டு மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதை தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசுவதில்லை என்றும், ஊர் ஊராக சென்று தன்னை திட்டுவது தான் அவருக்கு வேலை என்றும் முதலமைச்சர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments