சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுகவினர் பணம் விநியோகம் செய்ததாக புகார்

0 1831
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணம் விநியோகம் செய்யப்படுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணம் விநியோகம் செய்யப்படுவது போன்று வெளியான வீடியோ குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு, அதிமுகவின் சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜெ.எம் பஷீர், துண்டு பிரசுரத்துடன் 500 ரூபாய் வழங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாகநாதன் அளித்த புகாரின் பேரில், வீடியோவில் இருப்பவர்கள் யார் என்பதனை கண்டறியும் பணியில் அண்ணாசாலை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அந்த வீடியோ மற்றும் விசாரணை அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும் போலீசார் அனுப்பி வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments