வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் குழந்தையை கொன்று தாயும் தற்கொலை : கணவன், மாமியார் கைது

0 67491
வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் குழந்தையை கொன்று தாயும் தற்கொலை : கணவன், மாமியார் கைது

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் பெண் குழந்தையைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.

குத்தாலம் பகுதியைச் சேர்ந்த பாத்திபன் என்பவரின் மனைவி செல்வகுமாரி மற்றும் ஒரு வயது லிவிஷா என்ற பெண் குழந்தை நேற்று முன்தினம் மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இது தொடர்பான போலீசார் விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவரது மாமியார் தனலட்சுமி 30 சவரன் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

திருமணம் ஆகி 2 ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்ததையடுத்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மன உளைச்சலில் பெண் குழந்தையை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments