பாலியல் வழக்குகளில் தவறான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

பாலியல் வழக்குகளில் தவறான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் தவறான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பலாத்காரம் செய்தவரை மணமுடிக்கும்படியும் கையில் ராக்கி கட்டி சகோதரனாக ஏற்கும்படியும் நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிவுரை வழங்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சட்டப்படியும் சாட்சியத்தின் அடிப்படையிலும் நீதி வழங்க வேண்டிய முக்கியப் பொறுப்பில் உள்ள உச்சநீதிமன்றம் பாலியல் தொடர்பான வழக்குகளில் நுன்ணுணர்வு பயிற்சிப் பெறும் படி நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குற்றவாளியால் ஏற்பட்ட பாதிப்பையோ தீங்கையோ புறக்கணிக்க முடியாது என்றும் குற்றவாளிக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தக் கூடாது என்றும் குற்றவாளியை சிறிய தண்டனை கொடுத்து தப்ப விடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கடுமை காட்டியுள்ளது.
Comments