உத்தரகாண்ட் முதலமைச்சரின் "கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்" கருத்தால் சர்ச்சை

0 1880
உத்தரகாண்ட் முதலமைச்சரின் "கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்" கருத்தால் சர்ச்சை

பெண்கள் முழங்கால் தெரிய ஜீன்ஸை கிழித்து விட்டு அணிவது தவறு என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத்சிங் ராவத் கூறிய அறிவுரை பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது.

மாணவிகள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வவர்கள்,  நடிகைகள் என பலரும் நாங்கள் அப்படித்தான் கால் அழகு தெரியும் படி கிழிந்த ஜீன்ஸ் அணிவோம் என்று சமூக ஊடகங்களில் ஜீன்ஸ் அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் விமானத்தில் வந்தபோது கால்கள் தெரிய ஜீன்ஸ் அணிந்திருந்ததாகக் கூறிய தீரத் சிங்கிற்கு பதிலளித்த சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, ஆண்கள் கலாச்சாரத்தை காக்க விரும்பினால் வேட்டி கட்டச் சொல்லுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments