இந்தியா-இங்கிலாந்து மோதிய 4வது 20ஓவர் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றி

0 3345
இங்கிலாந்துக்கு எதிரான 4வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், பந்த் 30 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்களும் எடுத்தனர்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

ஜேசன் ராய் 40 ரன்களும், பென் ஸ்டோர்க்ஸ் 47 ரன்களும் எடுத்தனர். ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.5 போட்டிகள் கொண்ட தொடரில், இதுவரை நடந்த 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா இரண்டில் வெற்றி பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments