தமிழகம்- புதுச்சேரியில் இன்றுடன் நிறைவடைகிறது வேட்புமனுத் தாக்கல்

0 1634
தமிழகம்- புதுச்சேரியில் இன்றுடன் நிறைவடைகிறது வேட்புமனுத் தாக்கல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு 4 ஆயிரம் வேட்புமனுக்கள் இதுவரை தாக்கலாகி உள்ளன.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் வருகிற 6ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 12-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கியதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்புமனுக்களை அளித்தனர். சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின் திங்கட்கிழமை பெருமளவில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு இதுவரை 3 ஆயிரத்து 997 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 3ஆயிரத்து 332 பேர் ஆண்கள், 664 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆகியோர் அடங்குவர்.வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வரும் 22-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாகும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments