வேட்பாளர் குஷ்புவிடம் மாணவர் செய்த குறும்பு..! செமஸ்டர் கேன்சல் வேண்டுகோள்

0 2607
வேட்பாளர் குஷ்புவிடம் மாணவர் செய்த குறும்பு..! செமஸ்டர் கேன்சல் வேண்டுகோள்

சென்னையில் வாக்கு சேகரிக்க சென்ற குஷ்புவிடம், செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த குறும்பு கார மாணவனால் கலகலப்பு ஏற்பட்டது

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட சூளைமேடு பகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது குஷ்புவை நோக்கி மாணவர் ஒருவர், மேடம், செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என உரக்க கத்தி குறும்புதனமாக கோரிக்கை வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு "ஏன் தம்பி....ஏன்..? என சிரித்துக்கொண்டே கொஞ்சம் கஷ்டப்பட்டு படிங்க தம்பி... கொரோனா காலகட்டத்தில் ஏற்கனவே பல மாதங்கள் ஓய்வு எடுத்து விட்டோம்" என்று அவருக்கு ஆறுதல் கூறினார்.

அதற்கு அந்த மாணவனோ, "பள்ளி மாணவர்கள் மட்டும் தேர்வுகள் ஏதும் இல்லாமல் ஜாலியாக இருப்பதாகவும், கல்லூரி மாணவர்களாகிய தங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து டார்ச்சர் செய்வதாகவும், அதனால் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

சுதாரித்துக் கொண்ட குஷ்பு நீங்கள் எந்த கல்லூரி மாணவர் தம்பி என கேட்க..."அதை மட்டும் நான் சொல்லவே மாட்டேன்" என அந்த மாணவன் பயந்து நழுவியதால், கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது...

ஓட்டுக்காக விடுமுறைவிடச்செய்து, தேர்வுகளை ரத்து செய்தது நாங்கள் தான் என்று மார்தட்டும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் கல்லூரி மாணவனுக்கு நறுக்கென்று புத்தி சொல்லி லைக்ஸை அள்ளி இருக்கிறார் குஷ்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments