அக்கம் பக்கம் பார்க்காதே ஆளை கண்டு மிரளாதே... கெத்தான பெண் வேட்பாளர்.!

0 7285

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஐ.ஜே.கே கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக சைக்கிள் ஓட்டி வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

மங்களகரமாக சைக்கிளில் வரும் இவர்தான் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐ.ஜே.கே கட்சியின் வேட்பாளர் அருணாதேவி பாண்டியன்.

அதிகரித்துவரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தனது தந்தையின் சைக்கிளில் வேட்புமனுதாக்கல் செய்ய வந்திருப்பதாக தெரிவித்த வேட்பாளர் அருணாதேவி செய்தியாளர்களின் கோரிக்கையை ஏற்றி சிறிது தூரம் சைக்கிளை ஓட்டி வந்தார்.

தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கு 3 பேர் மட்டும் செல்ல வேண்டும் என கூறியதால், உடன் வந்த கூட்டணி கட்சி நிர்வாகிகளை அப்படியே விட்டு விட்டு தனது கணவரையும், வழக்கறிஞரையும் மட்டும் உடன் அழைத்து சென்றார் வேட்பாளர் அருணாதேவி.

நடந்து சென்ற போது அவர்களுக்கு, உதவி ஆய்வாளர் ஒருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் சிறிது தூரம் நடந்து சென்ற அருணாதேவி , தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments