திமுக ஆட்சிக்கு வந்தால், மகளிர் நலன் காக்க தி.மு.க. பாடுபடும் -மு.க.ஸ்டாலின்

0 1197
திமுக ஆட்சிக்கு வந்தால் சிறப்பு தாய் - சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடுதேடி மருத்துவ வசதி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் சிறப்பு தாய் - சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடுதேடி மருத்துவ வசதி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி தனித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்றும், மெட்ரோ ரயில் சேவை திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர் வழியாக கும்மிடிப்பூண்டி வரையிலும் நீட்டிக்கப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார். 

அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், அந்த தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பன், காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் S மாங்குடி, மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி, சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் குணசேகரன் ஆகியோருக்கு ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். அப்போது, திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்யப்பட்டு, அரசு பணியில் 3 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்.

பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்ட ஸ்டாலின், செய்ய முடியாத, பொத்தாம் பொதுவான பல உறுதி மொழிகளை அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளதாக சாடினார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை கூறிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் சிறப்பு தாய் - சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடுதேடி மருத்துவ வசதி செய்யப்படும் என்றார். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கியிருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments