ஒளியேற்றிய அதிமுக அரசு.! முதலமைச்சர் சூறாவளி பரப்புரை

0 1897

தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றி, பூரண ஒளியேற்றியுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பல்வேறு துறைகளில் தமிழக அரசு தேசிய விருதுகள் பெற்று, நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக, தமிழ்நாடு திகழ்வதாக இ.பி.எஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். டெல்டா விவசாயிகளுக்கு எதிரான, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ரத்து செய்தது ஆளும் அதிமுக அரசுதான் என்றார். 

இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், உயர்கல்விக்கு செல்வோர் விகிதமும் தமிழகத்தில்தான் அதிகம் என்றும் முதலமைச்சர் கூறினார்.  

வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நான்கு வருடங்களாக ஆட்சியை கலைக்க, கட்சியை உடைக்க சூழ்ச்சித் திட்டங்களை, தொண்டர்கள் ஆதரவோடு தவிடுபொடியாக்கியதாகவும் கூறினார். 

நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனுக்கு இ.பி.எஸ் வாக்குச்சேகரித்தார். 

பூம்புகார் தொகுதியில், தொடர்ந்து 3ஆவது முறையாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பவுன்ராஜை ஆதரித்து, செம்பனார்கோவில் கடைவீதியில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து, மயிலாடுதுறை தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமியை ஆதரித்து, மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

சீர்காழியில், அத்தொகுதி அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான பாரதியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏவும் அதிமுக வேட்பாளருமான முருகுமாறன், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவும் அதிமுக வேட்பாளருமான பாண்டியன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு, இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்குகோரினார்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments