தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை இப்போது நடத்துவது சரியல்ல - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

0 1479

கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியல்ல என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதம் நடக்கவிருந்த கிராம சபைக்கூட்டம் கொரோனா பரவலால் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிடக்கோரி திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், கொரோனா பரவல்  முழுமையாக கட்டுக்குள் வராத சூழலில் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியாக இருக்காது என்றார்.இதனை அடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments