டிராக்டரில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் டிராக்டரில் பேரணியாக சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். நேற்று தஞ்சை மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, திருவாரூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர், குடவாசல் எல்லையில் இருந்து பள்ளிவாசல் தெரு, கடைத்தெரு வழியாக பேருந்து நிலையம் வரை டிராக்டரில் பேரணியாக சென்றார்.
அவருடன் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் காமராஜும் டிராக்டரில் சென்றார். இருபுறமும் திரண்டிருந்த மக்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
Comments