அரசு பணத்தில் அல்ல சொந்த பணத்தில் தான் ஹெலிகாப்டரில் செல்கிறேன் - கமல்ஹாசன்

0 2061
அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை எனவும் தனது சொந்த பணத்தில் தான் ஹெலிகாப்டரில் செல்வதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை எனவும் தனது சொந்த பணத்தில் தான் ஹெலிகாப்டரில் செல்வதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் தங்கவேல், கமல்ஹாசனுடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், குறுகிய காலத்தில் பிரச்சாரத்திற்கு செல்வதற்காகவே ஹெலிகாப்டரை பயன்படுத்துவதாகவும், இதற்கான செலவை சமாளிக்கவே தான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சம்பாதித்ததாகவும் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் அறிவிப்பை பின்பற்றியே இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் தருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறிவித்துள்ளதாக கருதுவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments