கடலூரில் அதிமுக பிரமுகர்கள் உள்பட 8 பேர் இல்லங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

0 1420
கடலூரில் அதிமுக பிரமுகர்கள் 7 பேரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள், 10 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர்.

கடலூரில் அதிமுக பிரமுகர்கள் 7 பேரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள், 10 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனைக்காக சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, கடலூர் வந்திருந்தது. இங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் M.C. சம்பத்தின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படும் மதியழகன், முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் ,வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், தொழிலதிபர் மாதவன் மற்றும் அரசு ஒப்பந்தகாரர் சுரேஷ் உள்ளிட்ட 7பேர் வீடுகளிலும் ஒரே நேரத்தில் நண்பகல் 11.30 மணி அளவில், சோதனை துவங்கியது.

இரவு 9 .30 மணி வரை நீடித்த சோதனையில் பணமோ அல்லது ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments