முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாக போட்டி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், கட்சித் தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்காததால், சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பெருந்துறை தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றிபெற்ற தோப்பு வெங்கடாசலத்துக்கு வருவாய் துறை பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி வழங்கபட்டது. இதனை தொடர்ந்து 2016- ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் வெற்றிபெற்றார். ஆனால் வரும் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார் என்பவரை அதிமுக வேட்பாளராக அறிவித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேம்பித் தேம்பி அழுதார். தொடர்ந்து இரண்டு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து, பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
Comments