மேற்கு வங்க பாஜக பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார் பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள புரூலியாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள புரூலியாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளில் மார்ச் 27ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதையொட்டிப் புரூலியா மாவட்டத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
அதற்காக மேடை, வரவேற்பு, பாதுகாப்பு என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் உடலில் வண்ணம் பூசித் தாமரைச் சின்னத்தை வரைந்துகொண்டுள்ளனர்.
Comments