உத்ரகாண்ட்டில் சதாப்தி ரயில் 35 கி.மீ பின்னோக்கி ஓடியது ஏன்?

0 5587
பின்னோக்கி ஓடிய ரயில்

மாட்டின் மீது மேதியதால் பிரேக் பெயிலியர் ஆனதால், சதாப்தி ரயில் 35 கிலோ மீட்டர் தொலைவு பின்னோக்கி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியிலிருந்து உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள தனாக்பூருக்கு  பூர்ணகிரி ஜன்சதாப்தி ரயில் சென்று கொண்டிருந்தது. உஸ் மாவட்டத்தில் காதிமா - தனாக்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, மாட்டின் மீது ரயில் ஏறியுள்ளது. இதனால், ரயிலின் பிரேக் பெயிலியராகிப் போனதாக சொல்லப்படுகிறது. இந்த பகுதி சற்று தாழ்வான பகுதி என்பதால், இந்த சமயத்தில் ரயில் பின்னோக்கி ஓடத் தொடங்கியுள்ளது.  டிரைவர்களால் ரயிலை நிறுத்த முடியவில்லை. சுமார், 35 கிலோ மீட்டர் தொலைவு ஓடிய பிறகே ரயிலை காதிமா ரயில் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். ரயில் பின்னோக்கி ஓடுவதை பார்த்து பயணிகள் பதறிப் போனார்கள். தண்டவாளத்தருகே நின்று கொண்டிருந்தவர் ஒருவர் பதறி போய், என்ன ஆச்சு சார் ... என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த அனைத்து ரயில்களையும் ஆங்காங்கே நிறுத்தினர். பின்னர், காதிமா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் சல்லி கற்களை  கொட்டி ரயிலை அதிகாரிகள் நிறுத்த நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தில் ரயிலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் நிறுத்தப்பட்டதும் இறக்கப்பட்ட பயணிகள் பஸ்களில் ஏற்றி தனாக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில் டிரைவர்கள், கார்டு ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் டெல்லிக்கும் தனாக்பூரை இணைக்கும் வகையில் பூர்ணகிரி சதாப்ரி ரயில் சேவை தொடங்கப்பட்டது. மத்திய ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments