நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு?

0 2915
நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு?

டிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும், படத்திலிருந்து அந்த பாடலை நீக்கும் வரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, வழக்கு தொடர்பாக கர்ணன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, think music India யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments