கொரோனா ஆன்டிபாடிகளுடன் கண்டறியப்பட்ட உலகின் முதல் குழந்தை... ஆச்சரியத்தில் மருத்துவர்கள்

0 1989

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், புதிய வைரஸ் ஒன்று உருவெடுத்து உலக மக்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கியது . சார்ஸ் , நிபா போன்ற பல வைரசுகளுடன் போரிட்டு வென்ற மருத்துவர்களால் கூட அந்த புதிய வைரசின் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கதைகளில் வருவது போலக் கூட்டம் கூட்டமாக மக்கள் இறக்க நேரிட்டது. கொரோனா என்று பெயரிடப்பட்ட அந்த கொடிய வைரஸ், பலரது வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. செய்வதறியாது உலக நாடுகள் பலவும் ஊரடங்கு விதித்தன.

உலக பொருளாதாரமும், மக்கள் வாழ்வாதாரமும் வரலாறு காணாத அளவிற்குப் பாதிக்கப்பட்டது. உலக விஞ்ஞானிகள் பலரும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராகும் வேலையில் உருமாறி விஸ்வரூபம் எடுத்தது கொரோனா வைரஸ். மீண்டும் பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தனர். புதிய அரக்கனை எதிர்கொள்ளத் தடுப்பு மருந்துகளின் வீரியமும் அதிகரிக்கப்பட்டது

அந்த வகையில், எல்லாம் கட்டுக்குள் வந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்த வேலையில் அடுத்த அலை வீசத் தொடங்கியுள்ளது. அதிலும் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீண்டும் சில இடங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது . இதனைத் தொடர்ந்து மற்ற மாநில மக்களும் அச்சமடையத் தொடங்கியுள்ளனர். கொரோனாவிற்கு அஞ்சுவதா, அல்லது ஊரடங்கின் போது வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிப்பதை எண்ணி அஞ்சுவதா என்று தெரியாமல் மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இவை ஒரு புறம் இருக்க கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற, இரவு பகல் பார்க்காமல் உழைத்த பல முன்கள பணியாளர்கள் உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டது. நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருந்ததால், முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக நாடுகள் முடிவு செய்தது.

அதன்படி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சுகாதார பணியாளராக வேலை செய்து வந்த ஒரு பெண்மணிக்குக் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது அந்த பெண்மணி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். அண்மையில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ரத்த மாதிரிகள் சேமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் மருத்துவர்களுக்கு ஆச்சரியமான முடிவுகள் கிடைத்தன. கொரோனவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் குழந்தையின் ரத்த மாதிரியில் இயற்கையாகவே இருந்தன. இதன் மூலம், உலகில் கொரோனவை எதிர்க்கும் ஆன்டிபாடிகளுடன் பிறந்த முதல் குழந்தையாக இந்த குழந்தை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆன்டிபாடிகள் மூலம், குழந்தைகளால் கொரோனா வைரசைத் தொடர்ந்து எதிர்கொள்ள முடியுமா என்றும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments