கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 7 பேர் விமானத்தில் இருந்து வெளியேற்றம்: விமானப் போக்குவரத்து இயக்ககம் தகவல்

0 855
கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 7 பேர் விமானத்தில் இருந்து வெளியேற்றம்: விமானப் போக்குவரத்து இயக்ககம் தகவல்

விமானத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 7 பேரை இறக்கி விட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ, கொரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்கா விட்டாலோ விதிமீறலாகக் கருதப்பட்டு விமானத்தில் இருந்து வெளியே இறக்கி விடப்படுவர் என மார்ச் 13ஆம் நாளில் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி பலமுறை எச்சரித்த பின்னும் விதிகளைக் கடைப்பிடிக்காத பயணிகள் 7 பேர் கடந்த 5 நாட்களில் விமானத்தில் இருந்து வெளியே இறக்கி விடப்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

அலையன்ஸ் ஏர், இண்டிகோ, ஏர் ஏசியா ஆகிய நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments