ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் குஷ்பூ வேட்பு மனு தாக்கல்

0 1964
ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் குஷ்பூ வேட்பு மனு தாக்கல்

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கையற்கண்ணியிடம் குஷ்பு தமது வேட்பு மனுவை அளித்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த குஷ்புக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேட்பு மனுவை தாக்கல் செய்தபின்னர் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறினார்.

மேலும் தன் வாழ்வில் தோல்வி என்பதற்கு இடமே இல்லை என்று சூளுரைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments