அருப்புக்கோட்டை அ.தி.மு.க. வேட்பாளர் வைகைசெல்வன் மீது வழக்கு

0 1076
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது விதியாகும்.

இந்த நிலையில், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வைகைச் செல்வன் நேற்றிரவு பொம்மையாபுரம் கிராமத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பத்தரை மணி வரையிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால், வைகைச் செல்வன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments