வேட்பாளர்கள் அறிவிப்பு… புதுச்சேரியில் களைகட்டும் தேர்தல் திருவிழா..!

புதுச்சேரியில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அங்கு வேட்புமனுத்தாக்கல் களைகட்டியது.
புதுச்சேரியில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட வில்லியனூர் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு செய்தார்.
மனவலி தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், புதுச்சேரி தொழில் துறை அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கு காங்கிரஸ் அரசு கொறடா அனந்தராமனை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.
என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காங்கிரசில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரசில் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் சென்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஏனாம் தொகுதியில் ரங்கசாமிக்கு எதிராக காங்கிரசில் யார் களமிறங்குகிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த 15ஆம் தேதி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் ரங்கசாமி வேட்பு மனு தாக்கல் செய்திருப்பத் குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு உப்பளம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கடந்த 15 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அன்பழகன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
காந்தி நகர் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மோகன் குமாரிடம் தனது வேட்புமனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார்.
Comments