மும்பை காவல்துறையின் மரியாதையை மீட்டெடுக்கப் போவதாக புதிய காவல்துறை ஆணையர் நேமந்த் நகராலே உறுதி

0 817
மும்பை காவல்துறையின் மரியாதையை மீட்டெடுக்கப் போவதாக புதிய காவல்துறை ஆணையர் நேமந்த் நகராலே உறுதி

மும்பை காவல்துறையின் மதிப்பை மீட்டெடுக்கப் போவதாக புதிய காவல் துறை ஆணையர் நேமந்த் நகராலே உறுதியளித்துள்ளார்.

மும்பைத் தாக்குதலின் போது பல பேரின் உயிரைக் காப்பாற்றி பாராட்டு பெற்ற ஹேமந்த் நகராலே , மும்பை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வாஸே வெடிகுண்டு காரை முகேஷ் அம்பானி வீட்டின் அருகே நிறுத்திய விவகாரத்தை அடுத்து மும்பை காவல்துறை ஆணையர் பொறுப்பிலிருந்த பரம்பீர் சிங் அதிரடியாக மாற்றப்பட்டார்.

புதிதாக பொறுப்பேற்ற ஹேமந்த் நகராலோ செய்தியாளர்களிடம் பேசுகையில் மும்பை காவல்துறை சோதனையான காலகட்டத்தை சந்தித்து வருவதாக கூறினார்.

சில தவறான சம்பவங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பான என்.ஐ.ஏ விசாரணை குறித்து தாம் ஏதும் கூறப்போவதில்லை என்றும் மும்பை காவல் துறை தனது மதிப்பை திரும்பப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹேமந்த் நகராலே தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments