வடசென்னையில் ரூ.18,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றம்: தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

0 891
வடசென்னையில் ரூ.18,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றம்: தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

டசென்னையில் 18 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமது முயற்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திரு.வி.க நகர் தமாகா வேட்பாளர் கல்யாணியை ஆதரித்துப் பேசிய அவர், வடசென்னையில் கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக தொலைநோக்கு திட்டம் தமது முயற்சியால் உருவாக்கப்பட்டதாக கூறினார்.

5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் நிறைவேற்றபடக் கூடிய திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம், மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறினார்.

இந்த பணிகள் நிறைவடையும் போது வடசென்னையை முன்னேறிய நகரமாக மாற்றுவதில் என பெருமை கொள்வதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments