ஒரே நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பல்வேறு இடங்களில் இருப்பதை தடுக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு பரிசீலனை

0 1827
ஒரே நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பல்வேறு இடங்களில் இருப்பதை தடுக்க நடவடிக்கை : வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு பரிசீலனை

ரே நபரின் பெயர், வாக்காளர் பட்டியலில் பல்வேறு இடங்களில் இருப்பதை தடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இருப்பதை தடுப்பதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க தேர்தல் கமிஷன் விரும்புகிறது என்றார்.

ஆதாரை இணைத்தாலும், வாக்காளர் பட்டியல் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அதை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments