தமிழகத்தில் விறுவிறுப்படையும் தேர்தல் பிரசாரம் ! பல்வேறு கட்சியினரும் வாக்கு சேகரிப்பு

0 2031
தமிழகத்தில் விறுவிறுப்படையும் தேர்தல் பிரசாரம் ! பல்வேறு கட்சியினரும் வாக்கு சேகரிப்பு

சொன்னதை செய்து கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் ஒரே கட்சி அதிமுக என்று கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து அதிமுக துணை ஒருங்கினைப்பாளர் கே.பி. முனுசாமி வாக்கு சேகரித்தார்.  

மாட்டு வண்டியில் மணல் அள்ளும் பிரச்சினையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இருவேறு விதமாக பேசுவதாகவும், மக்களை தூண்டும் விதமாக செயல்படுவதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் ஆணை பெற்று மாட்டு வண்டிகளில் மணல் அள்ள பொதுப்பணித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பிரசாரம் மேற்கொண்டார்.  

லைஞரை பழித்து பேசியதால்தான் விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்றும் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தென்னலூர் எம். பழனியப்பனுக்கு  வாக்கு அளிக்க வேண்டும் என விராலிமலை, திருச்சி நான்கு வழி சாலையில் நடந்த பிரசார கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்புசாமியின் மகன் ரவி மனோகரன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சிவகிரிப்பட்டி, திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொண்டார்.

ரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம் சூலூரில் நடந்த  அதிமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா காலத்தில் திமுகவினர் எந்த பணியும் செய்யவில்லை எனக்கூறினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி சட்டமன்ற தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு பின் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ்வை ஆதரித்து கட்சி தொண்டர்கள் வீதி வீதி யாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

18 நாட்கள் திமுகவினர் கடுமையாக உழைத்தால் இன்னும் 50 ஆண்டுகாலத்திற்கு தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய மிகச்சிறப்பான நாட்கள் அமையும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார். திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் KP சங்கரை ஆதரித்து அவர் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் சங்கரபாண்டியபுரத்தில் நடந்த அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பேசிய சாத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் ராஜவர்மன், அ.தி.மு.க. இத்தேர்தலில் தோல்வியடையும் என்றும், அமைச்சர்கள் முறைகேடு புகார்களை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் பேசினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தங்கமணி கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
குப்பாண்டம்பாளையம், தட்டாங்குட்டை, களியனூர் உள்ளிட்ட பகுதியில் கூட்டணி கட்சியினரை சந்தித்த வேட்பாளர் தங்கமணி, சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட மாற்று திறனாளிகள் நல சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

புதுக்கோட்டை ஆலங்குடி திமுக வேட்பாளர் மெய்யநாதன் அறந்தாங்கி அடுத்த கடையாத்துப்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது பந்தயத்தில் ஈடுபட்டு வந்த வீரர்களுக்கு தார் கம்பு குச்சிகளை வாங்கிக் கொடுத்து உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளர் கோ. அரிக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, புரட்சி பாரத கட்சி நிர்வாகிகள் கூட்டாக இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  

ட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியின் வெற்றி என்பது, தமிழக மக்களின் வெற்றி என கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். கொட்டாரத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக - பாஜக கூட்டணியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு கூறினார். 

ரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம் சூலூரில் நடந்த  அதிமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா காலத்தில் திமுகவினர் எந்த பணியும் செய்யவில்லை எனக்கூறினார்.

யிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் எம்.எல்.ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  செம்பனார்கோவில், மேலமுக்கூட்டு, கீழமுக்கூட்டு, ஆறுபாதி உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். 

திருச்சி கிழக்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், அமமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் கொறடா ஆர். மனோகரன் ஆகியோ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனிகோவிற்கு அவரது நண்பரும் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments