மேற்கு வங்க பாஜக எம்பி அர்ஜூன் சிங் இல்லம் அருகே 15 இடங்களில் குண்டுவீச்சு : கண்காணிப்பு கேமராக்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல்

மேற்கு வங்க பாஜக எம்பி அர்ஜூன் சிங் இல்லம் அருகே 15 இடங்களில் குண்டுவீச்சு : கண்காணிப்பு கேமராக்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல்
மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஜகத்தள் எனுமிடத்தில் பாஜக எம்பி அர்ஜூன் சிங் இல்லம் அருகே அடுத்தடுத்து 15 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன.
போலீசார் வைத்திருந்த கண்காணிப்பு கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.ஒரு மூதாட்டி, ஒரு குழந்தை உட்பட குறைந்தது 3 பேர் இதில் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவீச்சு சம்பவங்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டியுள்ள நிலையில் அரசியல் காரணத்திற்காக நடந்த குண்டுவீச்சாக இது இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற வேட்பாளர் சோம்நாத் ஷ்யாம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
Comments