மத்தியப் பிரதேசம் இந்தூரில் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

0 1157
மத்தியப் பிரதேசம் இந்தூரில் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

த்தியப் பிரதேசம் இந்தூரில் நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதனால் கடைகள் யாவும் அடைக்கப்பட்டு நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை எந்தக் கடையையும் திறக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சாலையில் நடமாடியவர்களை போலீசார் வழிமறித்து விசாரித்து அபாரதம் விதித்தனர்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதித்த போலீசார் அவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கினர்.

மருந்துக் கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர்த்து அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments