மகாராஷ்ட்ராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! நேற்று ஒரேநாளில் 23,179 பேருக்கு பாதிப்பு; 84 பேர் உயிரிழப்பு

0 1131
மகாராஷ்ட்ராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! நேற்று ஒரேநாளில் 23,179 பேருக்கு பாதிப்பு; 84 பேர் உயிரிழப்பு

காராஷ்ட்ராவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் நேற்று புதிதாக 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்தனர். இது வரை 23 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்ட்ரா விளங்குகிறது.

சுமார் 22 லட்சம் நோயாளிகள் பூரண குணம் அடைந்துள்ளனர். இதனிடையே தானே, அவுரங்காபாத் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் உணவகங்கள், மதுபான விடுதிகள் இரவு நேரத்தில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக் கூடாது என்றும் உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments