அகமதாபாத்தில் இன்று நடக்கிறது 4வது டி20 கிரிக்கெட் போட்டி..! இங்கிலாந்துக்கு பதிலடி கொடுப்பார்களா இந்திய வீரர்கள்?

0 2470
அகமதாபாத்தில் இன்று நடக்கிறது 4வது டி20 கிரிக்கெட் போட்டி..! இங்கிலாந்துக்கு பதிலடி கொடுப்பார்களா இந்திய வீரர்கள்?

டி20 கிரிக்கெட் தொடரை யார் வெல்லப்போவது என்று நிர்ணயிக்கும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சையில் ஈடுபடுகிறது.

5 போட்டி கொண்ட டி20 தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கும் இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கும்.

அதேநேரம் தொடரை தக்கவைக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்பந்தத்தில் இந்திய அணி களமிறங்குவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

சேஸிங்கில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்கள் இலக்கை நிர்ணயிப்பதிலும் கவனம் செலுத்தினால் வெற்றி வாகை சூட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments