உத்தரகாண்டில் 35 கி.மீ. தூரம் பின்னோக்கி வேகமாக ஓடிய சதாப்தி ரயில்..! ரயில் தடம் புரளாததால் பயணிகள் உயிர் தப்பினர்

0 5181
உத்தரகாண்டில் 35 கி.மீ. தூரம் பின்னோக்கி வேகமாக ஓடிய சதாப்தி ரயில்..! ரயில் தடம் புரளாததால் பயணிகள் உயிர் தப்பினர்

த்தரகாண்டில் புர்னகிரி சதாப்தி விரைவு ரயில் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர்தப்பினர்.

காத்திமா ரயில் நிலையம் வரை ஓடிய ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் பின்னர் பேருந்துகளில் தன்காபுர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மாற்று ரயில் மூலம் அவர்கள் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தண்டவாளத்தில் மாடுகள் நின்றதால் பிரேக் போட்ட ரயில் ஓட்டுனர், ஒரு மாடு மீது மோதிவிட்டதாகவும் அதன் பிரேக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டு ரயில் பின்னோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது.ஒரு ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வேகமாக பின்புறம் கடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments