சதுரங்க வேட்டைக்கு சின்ன மச்சான் செய்த பெரிய வேலை தெரியுமா ? ரூ 24.5 கோடி அம்போ

0 9890
சதுரங்க வேட்டைக்கு சின்ன மச்சான் செய்த பெரிய வேலை தெரியுமா ? ரூ 24.5 கோடி அம்போ

சென்னை கோடீஸ்வரர் ஒருவரிடம் 250 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் பெரம்பலூர் ராஜவம்சத்திடம் இருப்பதாக நாடகமாடி மோசடி வழக்கில் சிக்கிய சின்ன மச்சான் இசையமைப்பாளர் நடத்திய, சதுரங்க வேட்டை சதிராட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி குரலில் ஏற்கனவே ஹிட்டான பாடலுக்கு இசையமைத்து விட்டு, தனது சொந்த திறமையால் ஹிட்டாக்கியதாக விளம்பரப்படுத்திய இசையமைப்பாளர் அம்ரீஷ் தான் இந்த சதுரங்க வேட்டை மோசடி நாயகன்..!

சினிமா மற்றும் சீரியல்களுக்கு பங்களாக்களை வாடகைக்கு விடும் கோடீஸ்வரரான வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் தான் அம்ரீஷ் வீசிய ஆசை தூண்டிலில் சிக்கிய தங்க மீன்..!

நெடுமாறனின் பங்களாவில் 2013 ஆம் ஆண்டு எனக்குள் நானே இல்லை என்று தனது தாயும் நடிகையுமான ஜெயசித்ரா இயக்கத்தில், நடித்த படப்பிடிப்பின் போது தான், பவ்யமாக பேசி நெடுமாறனுக்கு வலை விரித்துள்ளார் அம்ரீஷ்..!

பெரம்பலூர் ராஜவம்சத்திடம் 250 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் உள்ளது. அதனை மலேசிய நிறுவனம் என்மூலம் வாங்க இருக்கிறது. அந்த ராஜ வம்சத்தினரிடம் இருந்து இருடியத்தை வாங்குவதற்கு 60 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்தால் 160 கோடி ரூபாய் தருகிறேன் என்றும் காதில் பூ சுற்றியுள்ளார் அம்ரீஷ்..!

ஒரு நாள் மினி பஸ் நிறைய பெரம்பலூர் ராஜவம்சம் என்று ஒரு குழுவை அழைத்து வந்து அமர வைத்து 250 ஆண்டுகளுக்கு முந்தைய இருடியத்தின் மகிமையை அள்ளி விட்டுள்ளார் அம்ரீஷ்..!

அதன் பின்னர் இரு வெளி நாட்டுக்காரர்களை அழைத்து வந்து இவர்கள் மலேசியாவில் இருந்து வந்திருப்பதாக கூறி அந்த இரிடியத்தை விலைக்கு வாங்க தயாராக இருப்பதாக கூறி நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்

திடீரென ஒரு நாள் இரிடியம் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்வதாக கூறி மலேசியாவுக்கு சிறப்பு விமானத்தில் எந்த வித சோதனையும் இன்றி அம்ரீஷ் அழைத்துச் சென்றதாகவும், அங்கு சினிமாவில் வருவது போல ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்து போய் ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து ராஜமரியாதை கொடுத்ததால் தான் அம்ரீஷை நம்பியதாக தெரிவித்தார் நெடுமாறன்

2015 ஆம் ஆண்டுவரை கொஞ்சம் கொஞ்சமாக 24 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்ட அம்ரீஷ் அதன் பின் இருடியம் இதோ வருகிறது, வரி பிரச்சனை அப்படின்னு சொல்லி தன்னை ஏமாற்றி வந்ததாகவும் இறுதியாக கொரோனா ஊரடங்கு காலத்தில் தன்னை சந்திக்க வந்த அம்ரீஷ், மலேசியா காரர்கள் ஏமாற்றிவிட்டதாக தன்னிடம் நாடகமாடியதால் காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார் நெடுமாறன்

தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரீஷ், ஒரு சினிமா எடுப்பது போல அம்சமாக கதை சொல்லி அதற்கு ஏற்ற நடிகர்களை வைத்து ரியலாக நடிக்க வைத்து இந்த மெகா மோசடியை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அம்ரீஷுடன் தொடர்பில் உள்ள மோசடி நபர்கள் குறித்து காவல்துறையினர் விரிவாக விசாரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களும், ஆடம்பர பங்களாக்களையும் கையில் வைத்திருக்கும் நெடுமாறன் 24 கோடிகளை இழக்க ஒரே காரணம் பேராசை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments