பல்லாவரத்தில் நடந்து சென்று வாக்குசேகரித்த மு.க.ஸ்டாலின்

0 1706
சென்னை பல்லாவரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.

சென்னை பல்லாவரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.

பல்லாவரம் தொகுதியில் திமுக சார்பில் இ.கருணாநிதி போட்டியிடுகிறார். தாம்பரம் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பிய மு.க.ஸ்டாலின், பல்லாவரத்தில், திமுக வேட்பாளரை ஆதரித்து, வாகனத்தில் இருந்து இறங்கி, மார்க்கெட் சாலையில் நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். மு.க.ஸ்டாலினை கண்டு உற்சாகமடைந்த பொதுமக்கள், அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பல்லாவரம் மார்க்கெட் சாலையையொட்டிய ஒருசில பகுதிகள், ஆலந்தூர் தொகுதிக்குள் வருவதால், அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தா.மோ.அன்பரசனும் உடனிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments