குஷ்புவை கலாய்த்த பா.ம.க வேட்பாளர்..! ஜெயிக்க வச்சா ஷூட்டிங் தான்

0 4150
குஷ்புவை கலாய்த்த பா.ம.க வேட்பாளர்..! ஜெயிக்க வச்சா ஷூட்டிங் தான்

திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி, திமுகவின் உதயநிதியை கலாய்ப்பதாக நினைத்து தங்கள் கூட்டணியில் பக்கத்து தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் குஷ்புவை கலாய்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது...

சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கஸ்ஸாலி அவரது வெற்றிவாய்ப்பு குறித்து பேசும் போது தான் செல்லும் பகுதிகளுக்கு உதய நிதியால் வர இயலாது என்றும், தான் வென்றால் தொகுதியில் மக்களோடு மக்களாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

அதோடில்லாமல் நடிகரான உதயநிதி, குஷ்பு போன்றவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் சினிமா சூட்டிங் சென்று விடுவார்கள் பொதுமக்கள் எப்படி சென்று பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பி சொந்த கூட்டணி கட்சி வேட்பாளரான குஷ்புவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியுள்ளார், பா.ம.க வேட்பாளர் கஸ்ஸாலி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments