தெர்மாக்கோல் ரூ.10 லட்சம் ப்பே..! இது திமுக லக லக.

0 5284
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரூபாய் 10 லட்சம் ப்பே என்று எழுதப்பட்ட தெர்மக்கோலை கையில் ஏந்தி வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரூபாய் 10 லட்சம் ப்பே என்று எழுதப்பட்ட தெர்மாக்கோலை கையில் ஏந்தி வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். 

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சின்னம்மாள் என்பவர் வேட்பாளராக முதன் முறையாக களமிறக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் சின்னம்மாள் தொண்டர்களுடன் தெர்மாக்கோல் சகிதமாக வருகை தந்தார். அவரை கூட்டணி கட்சியினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்

அவர்கள் கையில் வைத்திருந்த தெர்மாக்கோல் பதாகையில் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. தெர்மாக்கோல் ரூபாய் 10 லட்சம் ப்பே!! என்ற வாசகத்துடன் இடம் பெற்றிருந்த அந்த பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார் சின்னம்மாள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments